ஈஸ்டர் பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து

ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on: 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் உயிர்ப்பு பெருவிழாவாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் திருநாள் கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகையாகும். அதன்படி ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் திருநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஈஸ்டர் வாழ்த்துகள். இந்த புனித நாள் நம்பிக்கையையும் புதுப்பித்தலையும் கொண்டாடுகிறது. அது அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், பிரகாசத்தையும் தரட்டும். இயேசுகிறிஸ்துவின் போதனைகள் அனைவரையும் அன்பாக இருப்பதற்கும், சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com