இயற்கை எரிவாயு இணைப்பை மறுத்தால் எல்.பி.ஜி. இல்லை- மத்திய அரசு அறிவிப்பு

பி.என்.ஜி இணைப்பு உள்ள நகரங்களில் உள்ள எல்.பி.ஜி. வாடிக்கையாளர்கள் அதற்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இயற்கை எரிவாயு இணைப்பை மறுத்தால் எல்.பி.ஜி. இல்லை- மத்திய அரசு அறிவிப்பு
Published on

வளைகுடா பிராந்தியத்தில் நடந்து வரும் போரால் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு (எல்.பி.ஜி.) தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

எனவே மக்கள் இயற்கை எரிவாயு இணைப்புக்கு (பி.என்.ஜி.) மாற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக பி.என்.ஜி இணைப்பு உள்ள நகரங்களில் உள்ள எல்.பி.ஜி. வாடிக்கையாளர்கள் அதற்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

தற்போது இயற்கை எரிவாயு இணைப்பு உள்ள பகுதிகளில் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் இயற்கை எரிவாயுவுக்கு மாறாவிட்டால், அவர்களது சமையல் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், 'பி.என்.ஜி இணைப்பு பெற வாய்ப்பு இருந்த போதும், அதை தேர்வு செய்யாத குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்குப்பிறகு எல்.பி.ஜி. வினியோகம் நிறுத்தப்படும்.

அதேநேரம் பி.என்.ஜி. இணைப்பு பெறுவதில் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமற்றதாக இருக்கம் பட்சத்தில், தடையில்லாச் சான்றிதழுக்கு உட்பட்டு விநியோகத்தைத் தொடர இந்த விதிமுறை அனுமதிக்கிறது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com