ராகுல் காந்தி எங்கே?: போஸ்டர் மூலம் தாக்கிய பாஜக- பதில் அளித்த காங்கிரஸ்..!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் பாஜக அவரது பயணம் குறித்து கிண்டல் செய்துள்ளது.
ராகுல் காந்தியின் வெளிநாடு பயணம்
ராகுல் காந்தியின் வெளிநாடு பயணம்
Published on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்து அவரை விமர்சனம் செய்து வருகிறது.

தற்போது வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் காணாமல் போன ராகுல் காந்தி, ராகுல் காந்தியை எங்கே?. பாரீசில் ராகுல் காந்தி என விதவிதமான போஸ்டர் மூலம் ராகுல் காந்திக்கு எதிராக தாக்குதலை பாஜக முன்வைத்துள்ளது. மேலும், இந்த பயணத்திற்கான நிதி குறித்தும் கேள்வி எழுப்புகின்றன.

ஷேசாத் பூனவாலா

அத்துடன் LoP (எதிர்க்கட்சி தலைவர்) என்பதை சுற்றுலா தலைவர் {Leader of Paryatan" (tourism)} என மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி இதை (வெளிநாடு பயணம்) மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். அதேவேளையில் பிரதமர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். என பாஜக செய்தி தொடர்பாக ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தி தொடர்பாளர் ஆர்.பி. சிங்:-

எனக்கு கிடைத்த தகவலின்படி, இது ராகுல் காந்தியின் 55-வது வெளிநாட்டு பயணம். பொதுத் தளத்தில் எனக்கு கிடைத்த கடைசி தகவல் மற்றும் ஆவணங்களின்படி 60 கோடி ரூபாய்க்கு மேல், செலவழித்துள்ளார். அவர் அதற்கு இணையான வருமானத்தைக் காட்டுவதில்லை. வருமான வரியாகவும் அவ்வளவு தொகையைச் செலுத்துவதில்லை. அப்படியென்றால், இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? இந்தச் செலவுகளை யார் ஏற்கிறார்கள்?

இவ்வாறு ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக-வின் குற்றச்சாட்டு மற்றும் கிண்டலுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் இது தொடர்பாக கூறியதாவது:-

ராகுல் காந்தி தமது நாட்டிற்கு மட்டும் தலைவர் அல்ல. பெரும்பாலான நாடுகள் அவரை தலைவராக கருதுகிறது. ஏராளமான மக்கள் அவரை எதிர்பார்க்கிறார்கள். அவரை பார்க்க, அவரை சந்திக்க, அவரது பேச்சை கேட்கவும் விரும்புகிறார்கள்.

ராகுல்காந்திக்கு தொடர் அழைப்பு

தொடர்ச்சியான அழைப்புகள் காரணமாக அவரால் மிகக்குறைந்த கால அளவை இரண்டு, நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே ஒதுக்க முடிகிறது. அதன்பின் அவர் பயணிக்கிறார். ஆனால், உலகில் உள்ள அனைவரும் பாஜக-வின் கொள்கை நிலைப்பாட்டுடன் உடன்படுபவர்கள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் இந்தியாவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கிறார்கள். அந்த பார்வையிலேயே ராகுல் காந்தியையும் அவர்கள் பார்க்கிறார்கள்.

இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com