

மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த மாதம் 23, 29 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வௌியிட்டார். அதன்பின் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அசாமில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஊடுருவல் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது மேற்குவங்கம் மட்டுமே ஊடுருவல்காரர்கள் நாட்டுக்குள் நுழையும் வழியாக உள்ளது.
மேற்குவங்க எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுவது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய கவலையாக மாறி உள்ளது.
மேற்குவங்க தேர்தல் அந்த மாநிலத்துக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் முக்கியமானது. நாட்டின் முழு பாதுகாப்பும் இந்தத் தேர்தலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எல்லையோர பகுதிகளில் வேலிகள் அமைக்க திரிணாமுல் அரசு நிலம் வழங்கவில்லை. இதற்கு காரணம் ஊடுருவல்காார்களின் வாக்கு வங்கியை உருவாக்க திரிணாமுல் காங்கிரஸ் விரும்புகிறது.
மேற்குவங்கத்தில் மே 6-ம் தேதி பாஜக ஆட்சி அமையும். ஆட்சி அமைத்த 45 நாள்களுக்குள் எல்லையில் வேலி அமைக்க தேவையான நிலத்தை மத்திய அரசுக்கு ஒதுக்கி, வேலிகளை அமைத்து, ஊடுருவல்களைத் தடுப்போம் என தெரிவித்தார்.