பயங்கரவாதம் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி - அமித்ஷா

பயங்கரவாதத்துக்கும், அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் எதிரான தனது சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா தொடரும்.
பயங்கரவாதம் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி - அமித்ஷா
Published on

பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு மத்திய மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் நாம் இழந்த அப்பாவி உயிர்களை இந்த நாளில் ஆழ்ந்து நினைவுகூர்கிறோம். நம் மக்களை இழந்த துயரமும் வலியும் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இப்போது வரை நிலைத்திருக்கிறது.

பயங்கரவாதம் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி; இதற்கு எதிராக நாம் நிச்சயமாக ஒன்றிணைந்து, சண்டையிட்டுத் தோற்கடிக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கும், அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் எதிரான தனது சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com