இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல - அமித் ஷா ஆவேசம்

Detect, Delete, Deport என்ற 3d கொள்கை மூலம் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல - அமித் ஷா ஆவேசம்
Published on: 

மகாராஷ்டிர மாநிலம் கொல்காப்பூரில் உள்ள மகாலட்சுமி கோயில் மேம்பாட்டுப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டிய பின்னர் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

அவர் கூறியதாவது, " ஊடுருவியவர்களை வாக்கு வங்கிகளாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே முயற்சிகின்றனர்.

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல. இங்கு பிறந்தவர்களுக்கு மட்டுமே இங்கு வாழும் உரிமை உண்டு.

மேற்கு வங்க எல்லைகளில் ஊடுருவல் முற்றிலுமாக தடுக்கப்படுவதுடன், நாடு முழுவதும் உள்ள சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவராகக் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.

மேற்கு வங்கத்தில் Detect, Delete, Deport என்ற 3d கொள்கை மூலம் சட்டவிரோத வங்கதேசத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

அங்கு இதுவரை சுமார் 5,000 சட்டவிரோத வங்கதேச குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com