

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஒரு பிரிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு பிரிவுக்கும் இடையே பிளவு நிலவி வருகிறது.
இதையடுத்து அனைந்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் ஆதரவு கோரி கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் சுமார் 2300 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் குறைந்தது ஐந்தில் ஒரு பகுதியினர் பொதுக்குழு கூட்டத்தை கூட்டும்படி கோரினால், 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மூத்த தலைவர், “இன்னும் சில நாட்களில் 1500 உறுப்பினர்களை சேர்த்துவிடுவோம்.
கோரிக்கையின்படி பொதுக்குழு கூட்டத்தை கூட்ட பொதுச்செயலாளர் மறுப்பு தெரிவித்தால், தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கையும் எடுப்போம்” என்று கூறியுள்ளார்.