தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி

எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு கோதாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

சூர்யா பேட்டை, கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தை உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு கோதாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com