இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 13 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,951 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 42 லட்சத்து 2 ஆயிரத்து 202 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,664, தமிழ்நாட்டில் 1,112, மகாராஷ்டிராவில் புதிதாக 889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த 1 ½ ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைவு ஆகும் .

கொரோனா பாதிப்பால் மேலும் 356 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கை உள்பட 281 மரணங்கள் அடங்கும்.

மொத்த பலி எண்ணிக்கை 4,55,068 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,028 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,951 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது.

தற்போது 1,63,816 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 241 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.

இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 11,31,826 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மொத்த பரிசோதனை எண்ணிக்கை 60 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com