12-வது சர்வதேச யோகா தினம்: இந்தியாவும் உலகமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பது போல் தோன்றுகிறது- பிரதமர் மோடி

யோகா அனைவரையும் இணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிபிரதமர் மோடி
Published on: 

12-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் 35 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. யோகா செய்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முழு நாடும், உலகமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதாக தோன்றுகிறது. இதுவே யோகாவின் வலிமை. யோகா அனைவரையும் இணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதற்கும் மற்றும் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, யோகா தினத்தில், வங்காள மக்கள் மேற்கொண்ட தூய்மை பணிக்காக அவர்களை நான் குறிப்பாக பாராட்ட விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான முன்னெடுப்பு.

இந்தியாவில், இமயமலை முதல் இந்திய பெருங்கடல் வரையிலும், கிழக்கே வடகிழக்கு மற்றும் வங்காளம் முதல் மேற்கே சவுராஷ்டிரா வரையிலும், நாடு முழுவதும் யோகாவின் ஆற்றலால் நிறைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com