விவசாயிகளை சுட குண்டுகள் வாங்க மத்திய அரசு தனி வரி வசூலிக்கிறதா?: மார்க்சிஸ்ட் கேள்வி

விவசாயிகளை சுடுவதற்கு துப்பாக்கி குண்டுகள் வாங்க மத்திய அரசு தனியாக கிரிஷி கல்யான் வரி வசூலிக்கிறதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
விவசாயிகளை சுட குண்டுகள் வாங்க மத்திய அரசு தனி வரி வசூலிக்கிறதா?: மார்க்சிஸ்ட் கேள்வி
Published on

புதுடெல்லி:

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். 

இரு தினங்களுக்கு முன் மந்த்சார் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மந்த்சார் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளை சுடுவதற்கு துப்பாக்கி குண்டுகள் வாங்க மத்திய அரசு தனியாக கிரிஷி கல்யான் வரி வசூலிக்கிறதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ”என்ன புத்திசாலித்தனமாக அரசாங்கம். கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருக்கிறது. மத்திய விவசாயத் துறை மந்திரி 3 ஆண்டு சாதனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டார். கேபினேட் கூட்டத்திற்கு பிறகு கூட எதுவும் பேசப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com