அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுகிறது- இளங்கோவன்

அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். #EVKSElangovan #ADMK
அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுகிறது- இளங்கோவன்
Published on

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழாவை காங்கிரசார் இன்று சிறப்பாக கொண்டாடினார்கள்.

சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நவ இந்தியாவை உருவாக்கியவர் நேரு. அவர் வழியில் வந்த ராஜீவ் நவீன இந்தியாவை உருவாக்கினார். கம்ப்யூட்டர், தொலைத்தொடர்பில் புரட்சியை செய்தவர்.

கிராமங்கள் முன்னேற பஞ்சாயத்துராஜ் திட்டத்தை கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமப் பகுதிகளுக்கு மத்திய அரசின் நிதி நேரடியாக வந்தது.

தற்போதைய அ.தி.மு.க. அரசுக்கு மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லை. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறார்கள். எப்போது தேர்தல் நடத்தினாலும், எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com