search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு
    X

    முன்னாள் அமைச்சர் காமராஜ்

    முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

    • முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று சோதனை நடத்தியது.
    • கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் 2015- ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்தது. குறிப்பாக காமராஜ் ரூ.58.44 கோடி அளவுக்கு சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருதினார்கள்.

    முன்னாள் அமைச்சர் காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் பெயரை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் 963 சவரன் நகை, 23.96 கிலோ வெள்ளி, ரூ.41.06 லட்சம் ஆகியவை கண்டறியப்பட்டன

    மேலும், கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×