முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகை

சென்டிரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகை
Published on

சென்னை :

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான ரெயில்வே போலீசார், இன்ஸ்பெக்டர் பத்மாகர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் நேற்று மாலை ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் மோப்ப நாய் உதவியுடன் நுழைவு வாயில்களில் ரெயில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு அதன் பிறகே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com