என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருகிற 26-ந்தேதி கோவளத்தில் படகு போட்டி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
- காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள படகு போட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்க உள்ளன.
- போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடத்தப்படுகிறது.
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள இந்த படகு போட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்க உள்ளன.
இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து படகுகள் கோவளத்துக்கு கொண்டுவரப்பட்டு பந்தயத்தில் பங்கேற்க உள்ளன. ஞாயிறு மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்த படகுப்போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த படகு போட்டியை கண்டுகளிக்க மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.