பட்ஜெட் மீது விவாதம்- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி தலைமை ஆலோசனை

சட்டசபை கூட்டத்தொடரில் கட்சியின் செயல்பாடு குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை  பட்ஜெட் மீது விவாதம் நடைபெற உள்ளது. 

பட்ஜெட் விவாதத்தின்மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக பேச உள்ளனர். இதுபற்றி முடிவு செய்வதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் தொடங்கியது. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரில் கட்சியின் செயல்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com