பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளை பாதுகாப்போம்- டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவு

பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டை மலை சீனிவாசன்.இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளில் பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக்கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.
பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளை பாதுகாப்போம்- டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவு
Published on

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தென்னகத்தின் அம்பேத்கர் என போற்றப்படும் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் இன்று. அப்போதைய சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிகட்சி அரசில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் அரசாணை வெளிவர காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி மகாத்மா காந்தி தமிழ் மொழியை அறிந்துகொள்வதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இரட்டை மலை சீனிவாசன்.

பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டை மலை சீனிவாசன். அவரது பிறந்தநாளில் பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக்கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com