பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதிதல்ல- எல்.கே.சுதீஷ் பேட்டி

தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல.
பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதிதல்ல- எல்.கே.சுதீஷ் பேட்டி
Published on

ஈரோடு:

தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் உள்பட அரசு எந்திரமே இங்கு தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. எனவே பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படை வர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

இதேபோல் பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் இங்கு உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தால் வடமாநிலத்தவர்கள் எதற்காக இங்கே வரப்போகிறார்கள்.

இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல. அவர்களுக்கு பழக்கப்பட்டது தான். ஆளும் கட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவதை எதிர்த்து தான் இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com