வாகன விபத்தில் சொட்டு நீர் பாசன ஏஜென்சி உரிமையாளர் பலி

பார்சல் சர்வீஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் உடலை கைப்பற்றிய போலீசார், வேனை பறிமுதல் செய்த விசாரணை
வாகன விபத்தில் சொட்டு நீர் பாசன ஏஜென்சி உரிமையாளர் பலி
Published on

ஆலங்குடி, 

ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் நடுத்தெருவை சேர்ந்த கரு ப்பையா மகன் பிச்சை (வயது 48 ). இவரது மனைவி வேணி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் வம்பனில் ஷிவானி ஏஜென்ஸ் சொட்டு நீர் பாசன கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் ஆலங்குடி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பூச்சிக்கடை யிலிருந்து ஆலங்குடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.அப்போது பின்னால் வந்த பார்சல் சர்வீஸ் சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிச்சைஇரத்த காயங்களுடன் சாலையோரம் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்கு டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிந்து தனியார் பார்சல் சர்வீஸ் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com