தனியார் நிதி நிறுவன மேலாளர் லாரி மோதி பலி

டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துவழக்கு பதிந்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்
தனியார் நிதி நிறுவன மேலாளர் லாரி மோதி பலி
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 37). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் பேரளி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். க.எறையூர் பிரிவு பாதை அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நல்லுசாமியை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com