search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வை  எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது  எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
    X

    அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

    • நான் சாதாரண கிளைக்கழக செயலாளராக என்னுடைய சிலுவம்பாளையத்தில் பணியாற்றினேன். இன்றைய தினம் உங்களுடைய ஆதரவோடு அ.தி.மு.க.வுடைய இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளேன்.
    • தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை முடக்க நினைக்கின்றார்.

    சேலம்:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனி சாமி முதன் முதலாக தனது சொந்த மாவட்டத்திற்கு வந்தார். அவர் தலைவாசல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நின்று அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரை ஆற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது-

    அ.தி.மு.க. வலுமையாக வும், திறமையாகவும், வேகமாகவும் வளர்ச்சி அடைய நாடு பாடுபடு வேன். அ.தி.மு.க. மிகப் பெரிய இயக்கம். நான் சாதாரண கிளைக்கழக செயலாளராக என்னுடைய சிலுவம்பாளையத்தில் பணியாற்றினேன். இன்றைய தினம் உங்களுடைய ஆதரவோடு அ.தி.மு.க.வுடைய இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளேன்.

    தி.மு.க.வில் வாரிசு முறையில் தலைவர் ஆகிறார்கள். முதலில் கருணாநிதி, ஸ்டாலின், பிறகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தான் தலைவராக வர முடியும்.

    ஆனால் சாதாரண தொண்டனாக இருந்து அ.தி.மு.கவில் உட்சபட்ச பதவியான பொதுச் செயலாளராக ஆக முடியும். நான் 4 ஆண்டுகள் 2 மாதம் ஆட்சி காலத்தில் இருந்தேன். நான் முதல்- அமைச்சராக பார்க்கவில்லை. உங்களை எல்லாம் முதல்-அமைச்சராக நான் பார்த்தேன்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை முடக்க நினைக்கின்றார். ஸ்டாலின் அவர்களே உங்களை போல் ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க. தொண்டனை கூட தொட்டு பார்க்க முடியாது. எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இளை ஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக அ.தி.மு.க. அரசு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் எதிரிக்கு சாதகமாகி விட்டது.

    ஆனால் சூதாட்டத்தை தடை செய்ய அதற்கு ஒரு கமிஷம் தி.மு.க. அமைத்துள்ளது. இதுவரை 37 கமிஷன்கள் அமைத்து ஒரே சாதனை படைத்த அரசாங்கம் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம். எல்லாத்துக்கும் குழு தான். குழு போட்டால் உடனே முடிந்து போச்சு. ஸ்டாலின் அரசாங்கம் குழு அரசாங்கம். அந்த குழு குடும்ப அரசாங்கமாக இருக்கிறது. மக்கள் அரசாங்கமாக இல்லை. பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?.

    இதையெல்லாம் விட்டு விட்டு இன்றைக்கு யாேரா சொல்வதை கேட்டுவிட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவில் எந்த முதல்-அமைச்சரும் இப்படி 37 குழு அமைத்ததில்லை. பொம்மை முதல்-அமைச்சர் என்பது ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கிறது. நாங்கள் போட்ட திட்டத்தை திறந்து வைத்து, போட்டோ எடுக்கிறது தான் அவருடைய வேலை. இந்த ஒரு வருடமாக இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.100 சதவீதம் வீட்டு வரியை உயர்த்திய ஒரே அரசாங்கம் தி.மு.க. தான். இதற்கு முடிவு கட்டும் விதமாக அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற உழைப்போம். வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×