இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழந்தார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு
Published on

கரூர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 32). டிரைவரான இவர், வெள்ளியணை-ஜெகதாபி சாலை திருமலை நாதன்பட்டி பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ஜோதீஸ்வரன் தலையில் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com