search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை மதிப்பீடு பட்டய பயற்சி அடுத்த மாதம் தொடக்கம்
    X

    நகை மதிப்பீடு பட்டய பயற்சி அடுத்த மாதம் தொடக்கம்

    • பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
    • தற்போதைய படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தமது கல்வி தகுதியினை உயர்த்தி கொள்ள இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு ேமலாண்மை நிலையத்தில் 2022-ம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பட்டயச் சான்றிதழ் சேர்க்கை நடைபெறுகிறது.

    இது குறித்து முதல்வர் (பொ) அன்பு பசும்படியார் வெளிட்டுள்ள செய்திகுறிப்பு:

    மேற்படி பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பட்டதாரிகளும் இப்பயிற்சியில் சேரலாம். 01.09.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிக பட்ச வயது வரம்பு இல்லை.

    மேலும் ''நகை மதிப்பீட்டாளர் பயிற்சி'' 10.09.2022 தேதி துவக்கப்பட உள்ளது.

    நகைக் கடைகளிலும், அடகு கடைகளிலும் மற்றும் வங்கிகளிலும் நகைகளின் புழக்கம் அதிகமாகவுள்ளது.

    தங்கத்தை மதிப்பீடு செய்து அதன் தரத்தை கண்டறிய வேண்டியது அவசியம்.

    இதற்கு அறிவியல் பூர்வமான பயிற்சி தேவை.

    இளைய தலைமுறையினர் அனைவரும்இப்பயி ற்சியினை பயின்றுவேலை வாய்ப்பு பெறவும், சுய தொழில் தொடங்கவும், தங்கத்தைப் பற்றிய விழிப்பு ணர்வு பெறுவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

    நகை மதிப்பீடும்அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சியின்போது வகுப்பறை பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றியஅடிப்படை விபரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் 40 மணிநேர வகுப்பறை பயிற்சியும், நகை செய்முறை 30 மணிநேரமும், உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியம் செய்முறைப்பயிற்சி 30 மணி நேரமுமாக மொத்தம் 100 மணிநேரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியின் போது தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரி க்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும் இப்பயிற்சியினை முடித்தவர்கள் தேசிய வங்கிகள், வணிக வங்கிகள், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு கடை, ஆபரணக்கடை, நகை வணிகம் செய்யவும் நல்ல வாய்ப்பு உள்ளது. சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.

    சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மொத்தம் 18 நாட்கள் பயிற்சி நடைபெறும். தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    இப்பயிற்சியில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவிகளும், ஆண்களும், பெண்களும் எந்த பகுதிதியினை சேர்ந்தவராக இருந்தாலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற கல்லூரிகளில் படித்து வருபவர்கள் தற்போதைய படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தமது கல்வித் தகுதியினை உயர்த்திக் கொள்ள இப்பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர் தொலைபேசி எண்: 04362-238253, 9626011552 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×