விஜய் அரசியலுக்கு வருவது நல்லது: கன்னட நடிகர் சிவராஜ்குமார்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.சிறப்பு அபிஷேகத்தில் மற்றும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
விஜய் அரசியலுக்கு வருவது நல்லது: கன்னட நடிகர் சிவராஜ்குமார்
Published on

புதுச்சேரி:

கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி கீதா சிவராஜ்குமார் மற்றும் குடும்பத்தின, நண்பர்களுடன் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சனீஸ்வர பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகத்தில் மற்றும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் யானை பிரக்ருதியிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்தனர். கூட்டத்தில் சிக்கிய அவரை பத்திரமாக மீட்டு போலீசார் கோவில் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவர் ஏற்கனவே கோவிலுக்கு வழங்கிய வெள்ளி கிரீடத்தை கோவில் நிர்வாகத்தினர் அவரிடம் காண்பித்தனர். அதனை அவர் பார்வையிட்டார்.

நடிகர் விஜய் எனது நெருங்கிய நண்பர். அவரது ஐடியாலஜி நல்லா இருக்கிறது. நான் முன்பே சொல்லியிருந்தேன் விஜய் அரசியல் வருவார் என்று. அவருக்கு நல்ல மனசு இருக்கு. நல்ல மனசு இருப்பவர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் கள்ளச்சாராயம் இறப்பு குறித்து எனக்கு தெரியாது என்று கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com