தங்கம் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்தது

தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்தது
Published on

சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக தங்கம் விலை பவுன் ரூ.46 ஆயிரத்தை தொட்டது. நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46 ஆயிரத்து 200-க்கு விற்றது.

கடந்த 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்தது. தங்கம் விலை தொடர் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை கடும் சரிவை சந்தித்தது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்து ரூ.45 ஆயிரத்து 536-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.83 குறைந்து ரூ.5 ஆயிரத்து 692 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 குறைந்து ரூ.82 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.82.40-க்கு விற்கிறது.

சில நாட்களாக தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்து பவுன் ரூ.46 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருப்பது ஏழை-நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com