வாசுதேவநல்லூர் அருகே பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
வாசுதேவநல்லூர் அருகே பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்
Published on

சிவகிரி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு வாசுதேவ நல்லூர் அருகே திருமலா புரம் என்ற அருளாட்சி இந்திரா காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தேவையான பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் ஆகியவை வழங்கும் விழா நடைபெற்றது.

யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், ஊராட்சிமன்ற தலைவர் மாப்பிள்ளைதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கிளை செய லாளர் சமுத்திரகனி, மகளிர் அணி பத்மாதேவி, அருளா ட்சி அக்கிகணேசன், அஜித் குமார், உள்ளார் விக்கி, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com