அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

ரோட்டில் நடந்து சென்றவர் மீது பஸ் மோதியதில் உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
Published on

அரியலூர்.

உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி லெட்சுமி (வயது 80). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் லெட்சுமி வீட்டை விட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை கடந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக லெட்சுமி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com