இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம் நேருக்கு நேர் மோதி விபத்து
இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கடுகூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜதுரை, மனைவி பூங்கோதை (வயது 43). இவர்களது மகன் சதீஷ்(23). இவர்கள் கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக கடுகூர் அயன் சாலையிலுள்ள வயலுக்கு இரு சக்கர வாகனத்தில் மூன்று பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அஸ்தினாபுரம் பிரதானச் சாலையில் வசித்து வரும் சின்னப்பா மகன் வேல்முருகன்(31) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாரத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ், திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கயர்லாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com