கோவை மாவட்டத்தில் 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டத்தில் இதுவரை 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 146 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

கோவை:

கோவை மாவட்டத்தில் முதன் முதலில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில் 1456 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒரு கோவை வாலிபர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். மற்றவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். இவர்களில் தற்போது கோவையை சேர்ந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் இதுவரை 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 146 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். தற்போது இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று மாலத்தீவில் இருந்து கொச்சின் வழியாக கோவையை சேர்ந்த 3 பேர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 23 பேர் வந்தனர்.

அவர்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். கோவையை சேர்ந்த 3 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 3 பேரையும் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com