2ஜி வழக்கில் விடுதலை: கனிமொழி-ஆ.ராசாவுக்கு ஏ.சி.சண்முகம் வாழ்த்து

2ஜி வழக்கில் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை வரவேற்கிறேன் என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கில் விடுதலை: கனிமொழி-ஆ.ராசாவுக்கு ஏ.சி.சண்முகம் வாழ்த்து
Published on

சென்னை:

புதியநீதிக் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘2ஜி வழக்கில் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை வரவேற்கிறேன்.

இன்று நிரபராதி என்று விடுவிக்கப்பட்டவர்கள் இடைப்பட்ட காலங்களில் அடைந்த மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது. விடுதலை செய்யப்பட்ட கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு புதிய நீதிக்கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com