

எலும்பு தேய்மானம் என்பது எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமை குறைந்து, அவை எளிதில் உடையும் நிலையாகும். ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கும். ஆனால் சிறிய விழுதல் அல்லது லேசான தாக்கத்தில்கூட எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
உலகளவில் வயதானவர்களிடையே அதிகம் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திற்குப் பிறகு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
எலும்புகள் உயிருள்ள திசுக்களாகும். அவை தொடர்ந்து பழைய செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இந்த சமநிலை பாதிக்கப்படும் போது, புதிய எலும்பு உருவாகும் வேகத்தை விட பழைய எலும்பு அதிகமாக தேய்வதால் எலும்பு அடர்த்தி குறைகிறது.
1.முதன்மை எலும்பு தேய்மானம்
- வயது அதிகரிப்பால் ஏற்படுவது.
- மாதவிடாய் நின்ற பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் ஏற்படுவது.
- சில நோய்கள் அல்லது மருந்துகளின் பக்கவிளைவுகளால் ஏற்படுவது.
- நீண்டகால ஸ்டீராய்டு மருந்துகள்.
- தைராய்டு கோளாறுகள்.
- சிறுநீரக நோய்கள்.
- கல்லீரல் நோய்கள்.
- ஊட்டச்சத்து குறைபாடு.
- வயது முதிர்வு.
- பெண்களுக்கு மாதவிடாய் நிற்றல்.
- கால்சியம் குறைபாடு.
- வைட்டமின் D பற்றாக்குறை.
- உடற்பயிற்சி இல்லாமை.
- புகைப்பிடித்தல்.
- மதுபானம் அதிகம் அருந்துதல்.
- அதிக உப்பு மற்றும் குளிர்பானங்கள்.
- பரம்பரை காரணங்கள்.
- உடல் எடை மிகவும் குறைவாக இருப்பது.
- நீண்டகால படுக்கை ஓய்வு.
ஆரம்பத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். பின்னர்:
முதுகுவலி. உயரம் குறைவது, முதுகு கூன் விழுதல், அடிக்கடி எலும்பு முறிவு, மணிக்கட்டு, இடுப்பு, முதுகுத்தண்டு முறிவுகள், சிறிய விழுதலில்கூட எலும்பு உடைதல்.
இந்த நோய் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், ஸ்டீராய்டு மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்துபவர்கள் மற்றும் கால்சியம் குறைவாக உட்கொள்பவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இதிலிருந்து விரைவில் விடுபட, முறையான நடைப்பயிற்சி, படிக்கட்டு ஏறுதல், லேசான எடை தூக்கும் பயிற்சிகள், சமநிலைப் பயிற்சிகள். யோகா போன்றவற்றை தொடர்ந்து செய்வதன் மூலம் எளிதில் விடுபடலாம்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு:
*பால், தயிர், பன்னீர்.
*ராகி.
* எள்.
*முருங்கைக்கீரை.
*அகத்திக்கீரை.
*பசலைக்கீரை.
*பாதாம்.
*மீன்.
*முட்டை.
*சோயா.
*பருப்பு வகைகள்.
*அதிக குளிர்பானங்கள்.
*அதிக உப்பு.
*ஜங்க் உணவுகள்.
*புகைப்பிடித்தல்.
*மதுபானம்.
- தினமும் 20-30 நிமிடங்கள் காலை சூரிய ஒளியில் இருப்பது.
- தினசரி உடற்பயிற்சி.
- கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவு.
- உடல் எடையை ஆரோக்கியமாக பராமரித்தல்.
- வீட்டில் வழுக்கி விழும் அபாயங்களைத் தவிர்த்தல்.
- மருத்துவரின் ஆலோசனைப்படி எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்துகொள்வது.
- இடுப்பு எலும்பு முறிவு.
- முதுகுத்தண்டு முறிவு.
- நீண்டகால முதுகுவலி.
- நடப்பதில் சிரமம்.
- நிரந்தர உடல் ஊனம்.
- வாழ்க்கைத் தரம் குறைதல்.
எலும்பு தேய்மானம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதினரிடமும் தவறான உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாமை மற்றும் வைட்டமின் D குறைபாடு போன்ற காரணங்களால் அதிகரித்து வருகிறது.
சரியான உணவுமுறை, போதிய சூரிய ஒளி, சீரான உடற்பயிற்சி மற்றும் காலமுறை மருத்துவ பரிசோதனைகள் மூலம் இந்த நோயைத் தடுக்கவும், அதன் பாதிப்புகளை குறைக்கவும் முடியும். எலும்புகள் வலுவாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கையை நீண்ட காலம் வாழ முடியும்.