search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஜடேஜாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது- டோனி புகழாரம்
    X

    ஜடேஜாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது- டோனி புகழாரம்

    • நாங்கள் டாஸ் இழந்தது கடைசியில் எங்களுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.
    • ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதே கடினம்.

    ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் குவாலிபயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.

    அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில், குஜராத் அணிக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார் என சென்னை அணியின் கேப்டனான டோனி பாராட்டியுள்ளார்.

    இது குறித்து டோனி கூறியதாவது:-

    நாங்கள் டாஸ் இழந்தது கடைசியில் எங்களுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது. இது எங்களுக்கு மற்றொரு இறுதி போட்டி என சாதரணமாக கூறிவிட முடியாது. கடந்த 2 மாதங்களாக இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். அனைவரின் பங்களிப்பும் இதில் உள்ளது.

    சேசிங்கில் குஜராத் அணி வலுவானது என்பதால் தான் முதலில் பந்துவீச விரும்பியதாக டாசின் போது கூறியிருந்தேன். ஜடேஜாவின் பந்துவீச்சு போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதே கடினம்.

    அதே போல் பேட்டிங்கின் போது கடைசி நேரத்தில் மொய்ன் அலியுடன் அவர் கூட்டணி சேர்ந்து விளையாடியதையும் மறந்து விட கூடாது. கடைசி நேரத்தில் எடுத்த ரன்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×