புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத Trisha... சினிமாவில் இருந்து விலகுகிறாரா?

புதிய வெப் தொடர்களையும் அவர் ஏற்கவில்லை.
புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத Trisha... சினிமாவில் இருந்து விலகுகிறாரா?
Published on

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக திகழும் திரிஷா, தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். 22 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக கோலோச்சி வருகிறார்.

கதாநாயகிகளிலேயே அதிக சர்ச்சைகளில் சிக்கியுள்ளவர் திரிஷா தான். சமீபத்தில் கூட விஜய்யுடன் அவர் திருமண நிகழ்வுக்கு ஜோடி போட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரிஷா, தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கருப்பு' படம் மே மாதம் திரைக்கு வருகிறது. மேலும் மலையாளத்தில் 'ராம்', தெலுங்கில் 'விஸ்வம்பரா படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக புதிய படங்கள் எதிலும் திரிஷா ஒப்பந்தமாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. புதிய வெப் தொடர்களையும் அவர் ஏற்கவில்லை. திரிஷாவின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? என கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் 42 வயதாகும் திரிஷா சினிமாவில் இருந்து விலகப்போகிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com