Trisha | விஜய் குறித்து கேள்வி: பதிலளிக்காமல் மவுனமாக நடந்து சென்ற திரிஷா

திரிஷா
திரிஷா
Published on
Summary

சென்னை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, எந்த பதிலும் அளிக்காமல் நடிகை திரிஷா மவுனமாக நடந்து சென்றார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவர் விஜயுடன் தான் சேர்ந்துவாழ விரும்பவில்லை. எனவே தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டாக நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும், அதனை கண்டித்த பிறகும் மீண்டும் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்து வருகிறார் என குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கிடையே, திருவான்மியூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயும், நடிகை திரிஷாவும் ஒரே மாதிரி உடைகளை அணிந்துகொண்டு பங்கேற்றது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில், சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக நடிகை திரிஷா சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 4 புறப்பாடு பகுதிக்கு வந்தார். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரிடம், நடிகர் விஜய் தொடர்பான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, நடிகை திரிஷா எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக விறுவிறு என்று நடந்து விமான நிலையத்தின் உள்ளே சென்று விட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com