ஜேசன் சஞ்சய் இனிஷியலால் வெளிவந்த உண்மை? வைரலாகும் தகவல் | Vijay

ஜேசன் சஞ்சய் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குழந்தைகள் தங்களது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்துவது வழக்கம்.
ஜேசன் சஞ்சய் இனிஷியலால் வெளிவந்த உண்மை? வைரலாகும் தகவல் | Vijay
Published on

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் விஜய். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஹா என்ற மகளும் உள்ளனர். சினிமாத்துறையில் விஜய் பயணித்த காலத்திலேயே அவர் குடும்பத்தினருடன் விலகி இருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளது மற்றும் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் விஜய், திரிஷாவுடன் பங்கேற்றது என அடுத்தடுத்து நடைபெற்ற வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவரின் முதல் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையடுத்து ஜேசன் சஞ்சய் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். சினிமாவில் படுபிசியாக இருக்கும் ஜேசன் சஞ்சய் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

அதாவது, தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குழந்தைகள் தங்களது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்ட் மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

தந்தையின் பெயருக்கு பதிலாக அவர் "Jason Sanjay S" என்ற முறையில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதா (Sangeetha Sornalingam) பெயரை குறிக்கிறது என இணையதள வாசிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாவில் தனது தந்தை விஜயைப் பின்தொடர்வதை ஜேசன் நிறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com