விஜய் மகன் இயக்கும் படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் - தமன்

சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது. படத்தின் கதையை அவர் என்னிடம் கூறினார்.
விஜய் மகன் இயக்கும் படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் - தமன்
Published on

தமிழ் திரையுலன் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். தமிழில் பல்வேறு படங்களில் நடித்த சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தமன், ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, "எனக்கு இப்போதும் அதிர்ச்சியாகவே உள்ளது. பொதுவாக பெரிய ஹீரோக்களின் மகன்கள் நடிக்கவே விரும்புவர். இசையமைப்பாளர் குழந்தைகள் இசையமைக்க விரும்புவர். ஆனால் இவர் படம் இயக்க விரும்புகிறார். அப்படியெனில் அவர் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும்?"

"படத்தின் கதையை அவர் என்னிடம் கூறினார். கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அந்தப் படத்தில் நடிக்க பெரிய ஹீரோக்களும் முன்வந்திருக்கக்கூடும். படத்தின் கதையும் அப்படித் தான் இருக்கும். ஆனால், அவர் சந்தீப் கிஷன் தான் வேண்டும். அவர் தான் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று உறுதியாக கூறினார்."

"தயாரிப்பு நிறுவனம், அவர்கள் செய்த முதல் மியூசிக் க்ளிம்ப்ஸ் சிறப்பாக வந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அவரிடம், தான் நடிகர் விஜய்யின் மகன் என்று எப்போதும் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர் மிகவும் இயல்பாகவும், தன்மையாகவும் இருக்கிறார். அவருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். அவர் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கிறார்."

"ஜேசன் சஞ்சய் மிகப்பெரிய உச்சிக்கு செல்வார். அவர் படத்தில் என் அனுபவம் அனைத்தையும் பயன்படுத்துவேன். அவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது," என்று கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com