ஜன நாயகன் படத்தை தொடர்ந்து ரஜினியின் ‘ஜெயிலர்-2’ காட்சிகளும் கசிந்தன

‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜன நாயகன் படத்தை தொடர்ந்து ரஜினியின் ‘ஜெயிலர்-2’ காட்சிகளும் கசிந்தன
Published on

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ படம் முழு காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 9 நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெயிலர்-2’ படத்தின் காட்சிகளும் சமூக வலை தளங்களில் கசிந்ததால் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து படதயாரிப்பு நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

எங்கள் திருட்டு தடுப்பு குழு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த காணொலிகளை பகிர்வதிலோ விளம்பரப்படுத்துவதிலோ ஈடுபட்டுள்ள கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்பட அத்தகைய உள்ளடக்கத்தை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காணொலிகளை பகிர்வது மற்றும் டவுன்லோடு செய்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com