'டாடா' பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி

#Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
கார்த்தி- கணேஷ் பாபு
Published on

சூர்யதேவரா நாக வம்சியின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படமாக்கப்படுகிறது.

#Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, நடிகர் கார்த்தியின் புது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கார்த்தியின் 31-வது படத்தை கணேஷ் பாபு இயக்கவுள்ளார். இப்படம் தொடர்பாக இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் Karthi 31-வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இயக்குநர் கணேஷ் பாபுதமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு இளம் இயக்குநராவார். இவர் கவின் நடிப்பில் வெளியான 'டாடா' என்ற உணர்வுப்பூர்வமான காதல் மற்றும் குடும்பத் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com