முன்னணி இயக்குநருடன் நடிகர் கார்த்தி... புது படத்தின் சூப்பர் அப்டேட்!

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது.
நடிகர் கார்த்தி
Published on

சூர்யதேவரா நாக வம்சியின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், திறமையான இயக்குநர் கல்யாண் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படமாக்கப்படுகிறது.

#Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்புடன் வருகிறது. தொழில்துறை வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணி பெரும் உற்சாகத்தை தருகிறது.

வலுவான காம்பினேஷன், வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம், திறமையான இளம் இயக்குநர் மற்றும் மிகவும் பிரபலமான நட்சத்திரம் ஒன்றிணைந்துள்ள இந்தத் திரைப்படம், தற்போது உருவாகி வரும் மிக முக்கியமான மற்றும் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான பெரிய அப்டேட்கள் வெளியாக உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com