டெல்லியை சுற்றும் தமிழக காங்கிரஸ் தலைகள்...

முக்கிய விசேஷம் ஒவ்வொருவருக்கும் டெல்லியில் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். தலைவர் பதவிக்கு குறி வைத்து தமிழக காங்கிரஸ் பெருந்தலைகள் டெல்லியை சுற்றி கொண்டிருக்கின்றன.
டெல்லியை சுற்றும் தமிழக காங்கிரஸ் தலைகள்...
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டது. ராகுலும் அமெரிக்காவில் இருந்து திரும்பிவிட்டதால் நிர்வாகிகள் நியமனம் உடனடியாக தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் தலைவர் பதவிக்கு குறி வைத்து தமிழக காங்கிரஸ் பெருந்தலைகள் டெல்லியை சுற்றி கொண்டிருக்கின்றன.

டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதிமணி எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன், கார்த்தி ப.சிதம்பரம் என்று பலர் பதவி பெறும் போட்டியில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இதில் முக்கிய விசேஷம் ஒவ்வொருவருக்கும் டெல்லியில் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். அவர்களின் செல்வாக்கு தான் தமிழக தலைவரை தேர்வு செய்வதில் அடித்தளமாக இருக்கும் என்கிறார்கள்.

காங்கிரசில் பதவி பெற கீழ்மட்டத்தில் மட்டுமல்ல. மேல்மட்டத்திலும் அப்படித்தான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com