தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வலுவடைந்து வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மிச்சாங் புயல்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும். வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com