search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்கள் எதிர்ப்பதால் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை உடனே நிறுத்த வேண்டும்
    X

    மக்கள் எதிர்ப்பதால் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை உடனே நிறுத்த வேண்டும்

    • வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
    • வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் கண்டித்தும், பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பார்வதிபுரம் மக்கள் 7-ம் நாள் போராட்டம் நடத்தினர். போராடிய மக்களை காவல் துறையினரைக் கொண்டு கைது செய்த தமிழக அரசு, கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப் படுவதாகவும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்து விட்ட நிலையில், மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும். இதற்காக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கத்துடிப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×