உலகம்

இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல்

Published On 2024-05-12 04:28 GMT   |   Update On 2024-05-12 04:28 GMT
  • ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
  • அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்களது தடுப்பு நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் என்றார்.

தெக்ரான்:

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்கு தல் நடத்தியது. மேலும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்தது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து உள்ளது. இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் கமல் கர்ராசி கூறியதாவது:-

அணுகுண்டை உருவாக்குவது குறித்து எங்களிடம் எந்த முடிவும் இல்லை. அணுஆயுதங்களை பெற்றுக் கொள்ளுதல் அல்லது உற்பத்தி செய்தல் போன்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்களது தடுப்பு நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் என்றார்.

உலக வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டி வருகிறது என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News