தமிழ்நாடு

கோவில் விழாவில் நடனமாடி அசத்திய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2024-05-09 04:07 GMT   |   Update On 2024-05-09 04:07 GMT
  • தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
  • விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருவேங்கைவாசல் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் மற்றும் பிடாரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் நடைபெறும் பவுர்ணமி விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றது

இங்கு இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா காப்புக் கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அங்கு அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்த வந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். அவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Tags:    

Similar News