சினிமா செய்திகள்

பிரபலங்கள் முன்னிலையில் வெளியான ஜண்ட மட்டான் இசை ஆல்பம்

Published On 2024-05-21 15:34 GMT   |   Update On 2024-05-21 15:34 GMT
  • மருத்துவ பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.
  • இந்த ஆல்பத்தை ‘சரிகம’ நிறுவனம் வெளியிடுகிறது.

சென்னையில் பிரபல ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் யு.பி. சீனிவாசன் 'ஜண்ட மட்டான்' எனும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தை பார்த்து பாராட்டி அதன் உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம வாங்கியுள்ளது.

இந்த ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே.பி.ஒய். சரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவத்துறையில் பாரீசில் தனிப் பயிற்சி பெற்றுள்ள மருத்துவர் சீனிவாசன், கலைத்துறையிலும் ஆர்வம் உள்ளவர். இதன் காரணமாக மருத்துவ பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

நாகர்கோயில் வட்டார வழக்கை நன்கு அறிந்தவர் என்பதால் மருத்துவர் சீனிவாசன் 'ஜண்ட மட்டான்' பாடலை எழுதியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர்கள் ஹெச்.ஹூமர் எழிலன், ஹெச். சாஜஹான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவான இந்த ஆல்பத்தை 'சரிகம' நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News