search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை 204 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
    X

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை 204 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 204 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. வொர்க்கர் (58), கொலின் முன்றோ (30), ராஸ் டெய்லர் (57), நிக்கோல்ஸ் (83), ஆஸ்ட்லே (49) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் காட்ரெல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    58 ரன்கள் எடுத்த வொர்க்கர்

    பின்னர் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லெவிஸ், கைல் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கைல் ஹோப் 4 ரன்கள் எடுத்த நிலையிலும், லெவிஸ் 10 ரன்கள் எடுத்த நிலையிலும் போல்ட் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

    அதன்பின் வந்த வீரர்களும் போல்ட் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். ஷாய் ஹோப் (23), ஹெட்மையர் (2), நர்ஸ் (27), காட்ரெல் (8), கேப்ரியல் (0) ஆகியோரை போல்ட் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி 28 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 121 ரன்னில் சுருண்டது.


    83 ரன்கள் சேர்த்த நிக்கோல்ஸ்

    இதனால் நியூசிலாந்து 204 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. போல்ட் 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். மற்றொரு பந்து வீச்சாளர் பெர்குசன் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி 26-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×