search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்: வெயின் பிராவோ சாதனை
    X

    டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்: வெயின் பிராவோ சாதனை

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2017-18 சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

    முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தியபோது டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பிராவோ படைத்துள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ், சிட்டகாங் கிங்ஸ், கொமிலா விக்டோரியன்ஸ், டால்பின்ஸ், குஜராத் லயன்ஸ், கென்ட், லாகூர் குவாலண்டர்ஸ், மெல்போர்ன் ரெனேகட்ஸ், மும்பை இந்தியன்ஸ், சுர்ரே, சிட்னி சிக்சர்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், டிரினிடாட்&டொபாகோ, டிரினிடாட்&டொபாகோ ரெட் ஸ்டீல், விக்டோரியா, வெஸ்ட் இண்டியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.



    இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 331 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்திலும், சுனில் நரைன் 307 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×