search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    T10 கிரிக்கெட் லீக்: அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்
    X

    T10 கிரிக்கெட் லீக்: அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்

    ஷார்ஜாவில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
    ஷார்ஜாவில் T10 கிரிக்கெட் லீக் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணியும், சேவாக் தலைமையிலான மரதா அரேபியன்ஸ் அணியும் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பாக்டூன்ஸ் 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது. பகன் சமான் 22 பந்தில் அவுட்டாகாமல் 45 (தலா மூன்று பவுண்டரி, மூன்று சிக்ஸ்) ரன்னும், டவ்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்னும் சேர்த்தனர்.

    பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மரதா அரேபியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கம்ரான அக்மல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கம்ரான் அக்மல் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த லென்டில் சிம்மன்ஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.


    ஷேசாத் போல்டாகிய காட்சி

    ஹேல்ஸ் அதிரடியாக விளையாடியதால் முதல் 4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை ஷாகித் அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரசொவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வெயின் பிராவோ, சேவாக் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதனால் அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    முக்கிய விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்ந்ததால் மரதா அரேபியன்ஸ் அணியால் 10 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பாக்டூன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 26 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 2 ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அப்ரிடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    Next Story
    ×