search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமீயர் லீக் கால்பந்து: அர்செனலை 3-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்
    X

    பிரிமீயர் லீக் கால்பந்து: அர்செனலை 3-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்

    இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து லீக் தொடரில் அர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் 3-1 என வெற்றி பெற்றது. லிங்கார்டு 2 கோல் அடித்து அசத்தினார்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - அர்செனல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    சொந்த மைதானத்தில் அர்செனல் வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடினார்கள். ஆனால் அவர்களால் கோல்கள் அடிக்க இயலவில்லை. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் அன்டோனியோ வாலென்சியா முதல் கோலை பதிவு செய்தார். 11-வது நிமிடத்தில் லிங்கார்டு மேலும் ஒரு கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என முன்னணி பெற்றது.



    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் அர்செனல் அணியின் அலக்சாண்ட்ரே லகாசெட்டே கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் அர்செனல் 1-2 என பின்தங்கிய நிலையில் இருந்தது.

    63-வது நிமிடத்தில் லிங்கார்டு மேலும் ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் 3-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் மான்செஸ்டர் 3-1 என வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் 15 போட்டிகளில் 35 புள்ளிகள் மூலம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மான்செஸ்டர் சிட்டி 14 போட்டியில் 40 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அர்செனல் 15 போட்டிகளில் 28 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.


    Next Story
    ×