search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று பேட்டிங் செய்த சமாரா சில்வா - வைரலாகும் வீடியோ
    X

    ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று பேட்டிங் செய்த சமாரா சில்வா - வைரலாகும் வீடியோ

    இலங்கை வீரர் சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை எதிர்கொள்ள முயன்று அவுட் ஆன வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    கொழும்பு:

    இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் எம்.ஏ.எஸ். யுனிசலா மற்றும் டீஜே லங்கா ஆகிய இரு அணிகள் மோதின. அப்போது பேட்டிங் செய்த  சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை அடிக்க முயன்றார்.



    வேகமாக வந்த பந்தை ஸ்டம்பிற்கு வெளியே சென்று அடிக்க வெண்டும். அதே போல் சில்வாவும் பந்தை அடிப்பதற்காக வெளியே சென்றார். பந்து வீசப்பட்டது. வேகமாக வந்த பந்தை சில்வா முன்னால் சென்று எதிர்க்கொள்ள வேண்டும். ஆனால் அவர் ஸ்டெம்பிற்கு பின்னாலேயே நின்றார். பந்து வீச்சாளர் பந்தை சரியாக ஸ்டெம்பின் மீது எறிந்தார்.

    சில்வா அவுட் ஆனார். வித்தியாசமான முறையில் விளையாட முயன்ற சில்வா அவுட் ஆனது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பந்தை எதிர்கொள்ள முடியாததால் சில்வா ஓய்வறையை நோக்கி சென்றார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பலர் சில்வாவின் விளையாட்டை விமர்சித்து வருகின்றனர். அவரின் முயற்சி அனைவரிடமும் சிரிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம் சில்வா 2 ஆண்டுகளுக்கு விளையாட தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×